Madar Pirai Kanni Yanai
Sounds of Isha Lyrics


Jump to: Overall Meaning ↴  Line by Line Meaning ↴

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்

வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிற் கின்றேன்
அளவு படாததொ ரன்போ டையா றடைகின்ற போது




இளமண நாகு தழுவி யேறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்

Overall Meaning

The opening line of this song in Tamil, "Madar Pirai Kanni Yanai" translates to "The elephant with a tusk as sharp as a crescent moon." In Hindu mythology, Lord Ganesha, who is also known as Vakratunda, is often depicted with an elephant head and is considered the god of wisdom and new beginnings. The song is addressed to Lord Ganesha and speaks about his glory and power.


In the second verse, the lyrics mention how the singer witnesses Lord Ganesha dancing with his consort, Parvati, and how he is filled with awe at the sight. The third verse speaks about how Lord Ganesha is always present, guiding and leading the way without allowing his devotees to falter. The overall message of the song is about seeking the blessings of Lord Ganesha to overcome obstacles and find success.


The song is sung by the Indian spiritual group, Sounds of Isha, who are known for their music that fuses traditional Indian music with modern sounds. The group uses music as a way to spread awareness about yoga, meditation, and spirituality. Their songs, including "Madar Pirai Kanni Yanai," are widely popular among spiritual seekers across the world.


Line by Line Meaning

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
I sing with the daughter of the mountain, the elephant with the cloudy eyes.


போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
With the stream murmuring by my side, I enter the abode of the one who rides the breeze.


யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
Without flapping a single feather, he holds me with his serpent-like gaze.


காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
He who wields the spear enters in his valor and I behold him.


கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்
I saw the footsteps of the ancient ones, and I saw that which is seen.


வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்
I sing by the pen of the one who rides the peacock and the daughter of the paan tree.


களவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிற் கின்றேன்
Without bearing any deceitful thoughts, he sees the constant time.


அளவு படாததொ ரன்போ டையா றடைகின்ற போது
When he stands unmoved, undiluted by measurement, I see him.


இளமண நாகு தழுவி யேறு வருவன கண்டேன்
I saw the young lord of snakes slither and enter.


கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்
I saw the footsteps of the ancient ones, and I saw that which is seen.




Writer(s): Sage Tirunavukkarasar

Contributed by Claire C. Suggest a correction in the comments below.
To comment on or correct specific content, highlight it

Genre not found
Artist not found
Album not found
Song not found

Siva Gnaani

Interpreting the first line as Ganesha is ABSURD " madar Pirai KANNIYAANAI" Kanniyaanai has nothing to do with elephant. kanni is flower kanni (string of flowers worn on the head.). KANNIYAAN here refers to Lord Shiva chandra Shekara who wears "madar Pirai" beautiful cresecent moon as a flower on his head. malayan mahal is Parvathi. All that Appar says here is the devotees are singing the glory of Siva along with that of Parvathi while they carry water and flowers flowers for HIS worship (podhodu Neer Sumanthethi)

Siva Gnaani

The opening line of this song in Tamil, "Madar Pirai Kanni Yanai" translates to "The elephant with a tusk as sharp as a crescent moon." In Hindu mythology, Lord Ganesha, who is also known as Vakratunda, is often depicted with an elephant head and is considered the god of wisdom and new beginnings. The song is addressed to Lord Ganesha and speaks about his glory and power.

In the second verse, the lyrics mention how the singer witnesses Lord Ganesha dancing with his consort, Parvati, and how he is filled with awe at the sight. The third verse speaks about how Lord Ganesha is always present, guiding and leading the way without allowing his devotees to falter. The overall message of the song is about seeking the blessings of Lord Ganesha to overcome obstacles and find success.

The song is sung by the Indian spiritual group, Sounds of Isha, who are known for their music that fuses traditional Indian music with modern sounds. The group uses music as a way to spread awareness about yoga, meditation, and spirituality. Their songs, including "Madar Pirai Kanni Yanai," are widely popular among spiritual seekers across the world.

Most interesting comments from YouTube:

@subramanimk3596

@@Theboyrox1 yaa brother. greetings from tamilnadu.
All mahans of South ofcourse india predicted that ram rajya is not far off.
In 2001 yogi ramsurat kumar of Tiruvannamalai, before attaining jivasamadhi asked to gather his
patriotic devotees and assured that Ram rajya is not far off and india is going to become light of the world.
One person asked curiouslyexactly when swami?
Immediately yogi replied starts from 2020.
Now as a symbol of that ram temple going to come with flying colours after a uncountable years.
He also assured us that don't worry about pathetic political scenario and other driven issues of India, still india is safe to live.
Also various mahans assumed that in 2024 to 2026 no body can touch us even materialistically as well as spiritually.
Our duty is to chant bhaghavan Nama for the welfare of patriotic leaders governing our motherland .
Let's all be ready for visualizing greater Bharath in another 3 to 4 yrs after overcoming this crisis situation.
It's god's plan.no man can change that.whom ever it may be.
Just if at all another 2 to 3 hard years for our nation.
That's all



@NawinAD

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.

விளக்கம்: விரும்பத்தக்க பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடியவர்களாய் அருச்சிக்கும் பூவும் அபிடேக நீரும் தலையில் தாங்கித் திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர்பின் சென்ற அடியேன். கயிலை மலைக்குச் சென்றபோது ஏற்பட்ட உறுப்பழிவின் சுவடு ஏதும் தோன்றாதவகையில் தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு, கயிலை மலையிலிருந்து கால்சுவடு படாமல் திருவையாற்றை அடைகின்ற பொழுதில், விருப்பத்திற்கு உரிய இளைய பெண்யானையோடு ஆண்யானை சேர்ந்து இரண்டுமாக வருவனவற்றைக் கண்டு, அவற்றை அடியேன் சத்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம், சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதனவற்றைக் கண்டவனாயினேன்.

வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி,
களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக் கண் நிற்கின்றேன்,
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது,
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

விளக்கம்: வளர்தற்குரிய பிறை சூடிய பெருமானை நீண்ட கூந்தலை உடைய பார்வதியோடு இணைத்துப்பாடி, வீணாகக் கழிக்கப் படாத தொரு காலத்தைக் காணும் பொருட்டுக் கடைவாயிலின்கண் நிற்கும் அடியேன், எல்லையற்ற அன்போடு ஐயாற்றை அடையும்பொழுது இளமையை உடையதாய்க் கலத்தலுக்கு ஏற்றதாய பசுவினை, ஏறு தழுவ, இரண்டுமாய் இணைந்து வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.

Credit: www.tamilvu.org



@venky8212

மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி =
கண்ணி என்பது ஒரு விதமான மாலை தொடுப்பு

பொதுவாகப், பூவை ரெண்டு ரெண்டா தான் எடுத்துத் தொடுப்பார்கள்! ஒரு காம்பு, இன்னொரு காம்பின் மேல் படும்! வாழை நார் இரண்டையும் கட்ட, பூக்கள் வெளியில் இரு பக்கமும் துருத்திக் கிட்டு நிக்கும்! பூ இரு பக்கமும் இருந்தால் தான் மாலைக்கு அழகு!

ஆனால் கண்ணியில் அப்படி இல்லை! ஒரு பக்கம் மட்டும் காம்பு சேரும்படி கட்டுவார்கள்! அதனால் பொதுவா கண்ணியைத் தலைக்கு மட்டுமே சூடுவார்கள்! பராபரக்-கண்ணி, கண்ணி-நுண்-சிறுத்தாம்பு எல்லாம் கண்ணி என்று வரும் தமிழ் நூல்கள்!
ல் தான் மாலைக்கு அழகு!

ஆனால் கண்ணியில் அப்படி இல்லை! ஒரு பக்கம் மட்டும் காம்பு சேரும்படி கட்டுவாங்க! அதனால் பொதுவா கண்ணியைத் தலைக்கு மட்டுமே சூடுவார்கள்! பராபரக்-கண்ணி, கண்ணி-நுண்-சிறுத்தாம்பு எல்லாம் கண்ணி என்று வரும் தமிழ் நூல்கள்!
போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன் =
போது=அரும்பு மலர்! முழுக்க விரியாத மலர்! அதாச்சும் வண்டின் எச்சில் படும் முன்னரே மலரைப் பறிப்பது தான் பூசைக்கு வழக்கம்! அரும்பாகவே மாலை தொடுத்து விடுவார்கள்! சார்த்தும் போது, அது அழகாய் மலர்ந்து இருக்கும்!

ஈசனுக்கு அரும்பும், அபிடேக நீரும் கொண்டு செல்கின்றார்கள் அடியவர்கள்! அடியவர் முன் புக, அடியேன் பின் புகுவேன்! இது தான் பக்திக்கு அடிப்படை! தன்னையும், தன் டாம்பீகத்தையும் முன்னிறுத்திப் புகுவது இறைவனுக்குப் பிடிக்காத ஒன்று! ஏன்? இங்கே!
யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது =
வட கயிலை அடிவாரத்தில் இருந்து, கால் சுவடே படாமல், இதோ திருவையாற்றுக்கு வந்தாகி விட்டது!
திருவையாறு மிகப் பழமையான சிவத்தலம்!
இறைவன்: பஞ்ச-நதீஸ்வரர் = ஐயாறப்பர்!
இறைவி: தர்ம சம்வர்த்தினி = அறம் வளர்த்த நாயகி!

திருவையாறு மொத்தம் ஐந்து ஆறுகள் பாயும் தலம்! = காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு!
சத்குரு தியாகராஜ சுவாமிகளின் இசை ஆறும் இப்போது பாய்கிறது அல்லவா? ஐயாறு, ஆறாறு ஆகி விட்டது! :)
காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!=
களிறு=ஆண் யானை=களித்திருப்பதால் களிறு!
பிடி=பெண் யானை=களிறைத் தன் பிடியில் பிடித்து வைத்திருப்பதால் பிடி! :)
இப்படி இறைவனே காதல் மயமாகத் தான் காட்சி அளிக்கின்றான்! சிவ-சக்தி தத்துவமாய் நிற்பதால் தான் சிருஷ்டி-சங்கார ரகசியங்கள்!

சக்தி இல்லையேல் சிவம் என்னும் பதமே இல்லை! அன்னை இல்லையேல் அப்பன் என்னும் பதமே இல்லை!
மான், மயில், கிளி, அன்னம், மனிதர், என்று ஜோடி ஜோடியாக வருவதைப் பார்க்கிறார் அப்பர்! இறுதியில் பிடியோடு, களிறுமாய், அம்மையும் அப்பனும் ஜோடியாகவே வருகிறார்கள்!

கண்டேன் அவர் திருப்பாதம்! = முக்தி நிலையில் இருந்த அப்பருக்கு ஒன்றே ஒன்று மட்டும் தான் தெரியுதாம்? மோட்சத்தைத் தருவது எது? ஒன்றே ஒன்று தானே! எம்பெருமானின் திருவடி! = கண்டேன் அவர் திருப்பாதம்!

கண்டறியாதன கண்டேன்!! = கண்டாலும் அறிய முடியாதது எது?
அதான் கண்டாயிற்றே! கண்டால், அறிந்த மாதிரி தானே-ன்னு கேட்டால், இல்லை! கண்டாலும் அறிவுக்கு எட்டாது! அன்புக்கு ஒட்டும்!
கண்டு, அறியாதன "கண்டேன்"-ன்னு தான் சொல்லுறார்! கண்டு, அறியாதன "அறிந்தேன்"-ன்னு சொல்லலை பாருங்கள்!



@aaradhanaaadhya6776

மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி

போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது

காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.



@rameshloganathan4929

திருஐயாறு
காந்தாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.

போழ் இளங்கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி,
“வாழியம், போற்றி! என்று ஏத்தி, வட்டம் இட்டு ஆடா வருவேன்,
ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது,
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

எரிப்பிறைக்கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி,
முரித்த இலயங்கள் இட்டு, முகம் மலர்ந்து ஆடா வருவேன்,
அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்றபோது,
வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

பிறை இளங்கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடி,
துறை இளம் பல்மலர் தூவி, தோளைக் குளிரத் தொழுவேன்,
அறை இளம் பூங் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது,
சிறை இளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டுஅறியாதன கண்டேன்!

ஏடுமதிக்கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடி,
காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன்,
ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது,
பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

தண்மதிக்கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி,
உள் மெலி சிந்தையன் ஆகி, உணரா, உருகா, வருவேன்,
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது,
வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

கடிமதிக்கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி,
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்,
அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது,
இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

விரும்பு மதிக் கண்ணி யானை மெல்லியலாளொடும் பாடி,
பெரும் புலர்காலை எழுந்து, பெறு மலர் கொய்யா வருவேன்.
அருங் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது,
கருங் கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

முற் பிறைக் கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி,
பற்றிக் கயிறு அறுக்கில்லேன், பாடியும் ஆடா வருவேன்,
அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது,
நல்-துணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

திங்கள்-மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி,
“எங்கு அருள் நல்கும் கொல், எந்தை எனக்கு இனி? என்னா வருவேன்,
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது,
பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்;
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி,
களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக் கண் நிற்கின்றேன்,
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது,
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!



@balavarshu1

திருச்சிற்றம்பலம்


மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 1


போழிளங் கண்ணியி னானைப்
பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றியென் றேத்தி
வட்டமிட் டாடா வருவேன்
ஆழி வலவனின் றேத்தும்
ஐயா றடைகின்ற போது
கோழி பெடையொடுங் கூடிக்
குளிர்ந்து வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 2


எரிப்பிறைக் கண்ணியி னானை
யேந்திழை யாளொடும் பாடி
முரித்த இலயங்க ளிட்டு
முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி
ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி
வைகி வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 3


பிறையிளங் கண்ணியி னானைப்
பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித்
தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும்
ஐயா றடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடிச்
சேவல் வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன் 4


ஏடு மதிக்கண்ணி யானை
ஏந்திழை யாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையுங்
கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற
ஐயா றடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப்
பிணைந்து வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 5


தண்மதிக் கண்ணியி னானைத்
தையல்நல் லாளொடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி
உணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற
ஐயா றடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொ டாடி
வைகி வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 6


கடிமதிக் கண்ணியி னானைக்
காரிகை யாளொடும் பாடி
வடிவொடு வண்ண மிரண்டும்
வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்குங் கழலான்
ஐயா றடைகின்ற போது
இடிகுர லன்னதொர் ஏனம்
இசைந்து வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 7


விரும்பு மதிக்கண்ணி யானை
மெல்லிய லாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை யெழுந்து
பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி யுந்தும்
ஐயா றடைகின்ற போது
கருங்கலை பேடையொ டாடிக்
கலந்து வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 8


முற்பிறைக் கண்ணியி னானை
மொய்குழ லாளொடும் பாடிப்
பற்றிக் கயிறறுக் கில்லேன்
பாடியும் ஆடா வருவேன்
அற்றருள் பெற்றுநின் றாரோ
டையா றடைகின்ற போது
நற்றுணைப் பேடையொ டாடி
நாரை வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 9


திங்கள் மதிக்கண்ணி யானைத்
தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொ லெந்தை
எனக்கினி யென்னா வருவேன்
அங்கிள மங்கைய ராடும்
ஐயா றடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடிப்
பறந்து வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 10


வளர்மதிக் கண்ணியி னானை
வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததொர் காலங்
காண்பான் கடைக்கணிக் கின்றேன்
அளவு படாததோ ரன்போ
டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி
ஏறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன்.



@raviselvaraj3967

மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி

போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது

காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். திருச்சிற்றம்பலம்.



All comments from YouTube:

@eng.monisankerray621

Plz Raise Your voice For also Bangladeshi Hindu...
We are 2.2crore Hindu Live in Bangladesh.....
Har Har Mahadev...
Lots of Love From Bangladesh ♥

@KarkaKarpika

United By heart sagothara(brother)

@Vicky-sl4tc

Entire South Asia will become Hindu country soon 🙏❤️

@krishnanravichandran440

Are you guys persecuted there?

@ravidhyani1011

Ham to bolte hai lekin west bengal ke hindu to tum logo ka jikar bhi nahi karte

@ravidhyani1011

Om namah shivaay har har mahadev

18 More Replies...

@shivashankar28

Happy that Shaiva Siddhantam and Vedantam (Advaita, Vishishtadvaita and Dvaita), Kashmir Shaivism are taught to all Hindus, it's time for Hindus to learn their philosophy ! சிவாயநம

@parveshbisht4955

First we will acclaim our Kashmir back too

More Comments

More Versions